பல்நிலை
போக்குவரத்து
நிலையம்
கொட்டாவ - மாகும்புர


இலங்கை சிறந்த போக்குவரத்தின்
புது யுகம் மலர்கிறது

இன்றைய பஸ் சேவைகள் வழக்கமான அட்டவணையைப் பின்பற்றாது மற்றும் பயணிகளின் தேவைக்கு ஏற்ப சேவைகள் கிடைக்கும்.நடைமுறையாக மாறிய உண்மையான பல்நிலை போக்குவரத்து நிலையம்கீழ் பாரிய கொழும்பு நகர போக்குவரத்து வலையமைப்பு அபிவிருத்தித் திட்டத்தின் நகர அபிவிருத்தி மூலோபாயத்தினால் (3K திட்டம்)
ஜப்பான் சர்வதேச கூட்டுறவூ நிறுவனத்தின் மற்றும் இலங்கை அரசின் நிதி அனுசரணையின் படி 2,000 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள


இலங்கையின் பொது போக்குவரத்துச் சேவைஇ சர்வதேச தரத்திற்கு சமமாக முதன் முதலாக பல்நிலை போக்குவரத்து நிலையம் பொதுமக்கள் பாவனைக்கு வழங்கப்பட்டுள்ளது. உங்களின் பயணத் தேவைகளுக்காக பஸ் மற்றும் புகையிரத சேவைகள் ஒரே நிலையத்தில் மிகவூம் சிறந்த முறையில் பெற்றுத் தருவதற்கு இப்பல்நிலை போக்குவரத்து நிலையத்தில் வசதிகளை வழங்கப்பட்டுள்ளது. இச்சேவை எமது நாட்டில் நிகழ்காலத்தில் பொது போக்குவரத்தில் காணப்படும் சிரமங்களை வெற்றிகாணும் ஒரு பெரிய திட்டமாகும்.

கொட்டாவ - மாகும்புர பல்நிலை போக்குவரத்து நிலையமானதுஇ கொழும்பு நகரத்தில் மற்றும் நகரை அண்டிய வாகன நெருக்கடியை குறைத்தல் மற்றும் அதிகூடிய மக்கள் தொகை வசிக்கும் நகர பிரதேசங்களுக்கு அப்பால் அபிவிருத்தியை பரவச்செய்யூம் நோக்கில் நடைமுறைப்படுத்தப்படும் செயற்திட்டமாகும். நேரம் மற்றும் எரிபொருள் போன்ற பெறுமதிமிக்க வளங்களின் வீன் விரயத்தை குறைத்துஇ நிலையான பொருளாதார அபிவிருத்தியை நோக்கி பங்களிப்பை வழங்குதல் இதன் நோக்கமாகும்.நன்மைகள்


பல்நிலை போக்குவரத்து நிலையத்தினால் கிடைக்கும் விசேட நன்மைகள்

 • பஸ் மற்றும் புரையிரத சேவைகள் ஒரே இடத்தில் பெற்றுக்கொள்ளும் வசதி
 • நிகழ்கால இயங்கும் கால அட்டவணையின் காட்சி
 • தொழிநுட்ப தொடர்பாடல் வசதிகள்
 • பயணிகளுக்காகன சொகுசு ஓய்வூ அரங்குகள்
 • சுகாதார வசதிகள்
 • உணவக வசதிகள்
 • ATM மற்றும் டிஜி வங்கி வசதிகள்
 • தனியார் வாகனங்களை நிறுத்தி வைத்து பொது வாகனங்களில் பயணிக்கும் வசதிகள்
 • WiFi வசதிகள்
 • நேரம் மற்றும் பணத்தை சேமித்தல்
 • சுற்றுச்சூழல் நட்புடைய சூரிய சக்தி பாவனை


 • ஆரம்பிக்கும் பயண வழிகள் தொடர்பான தகவல்கள்
  மஹரகமயில் ஆரம்பித்த காலி மாத்தரை அதிவே நெடுஞ்சாலையில் பயணித்த பேருந்துகள் 2019 ஏப்ரல் 01ஆம் திகதி முதல் மாகும்புரயிலிருந்து ஆரம்பித்து பயணிக்கும்.
 • புகையிரத சேவைகள்
  களனிவெளி புகையிரதம்இ மாலபல்ல புகையிரத நிலையத்திற்கு பதிலாக சிறந்த வசதிகள் கொண்ட புகையிரத நிலையமான மாகும்புர புகையிரத நிலையம் வழியாக கோட்டை மற்றும் அவிஸ்ஸாவலை வரை பயணிக்கும்.
 • மாகும்புரையில் ஆரம்பிக்கும் குறுகிய தூர சேவைகள்
  138 புறக்கோட்டை (சாதாரண மற்றும் சொகுசு சேவைகள்), 129 மொரகஹஹேன, 336 மாலம்பே, 345 அபேக்ஷா வைத்தியசாலை வரையறுக்கப்பட்ட சேவைகள்.
 • மஹரகமையில் ஆரம்பிக்கும் தூரப் பயண சேவைகள்
  கண்டி வழியாக நாவலப்பிட்டி, பொலன்னறுவை, அனுராதபுரம், பலாங்கொடை, பதுளை ஆகிய சேவைகள் மாகும்புர பல்நிலை போக்குவரத்து நிலையம் வழியாக பயணிகளின் சேவைகளை வழங்கப்படும்.


© பல்நிலை போக்குவரத்து நிலையம - 2019

Solution By tekGeeks